தேசிய வாக்காளர் தினமான ஜன.,25ல் அனைத்து ஓட்டுச்சாவடி களிலும் புதிய வாக்காளர்களுக்கு கலர் பிளாஸ்டிக் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்கத்திருத்தப்பணிகள் அக்.,15 முதல் நவ.,10 வரை நடந்தன. 2015 ஜன.,1ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்க, இறந்தவர்களின் பெயர்களை நீக்க, திருத்தம், ஒரே சட்டசபை தொகுதிக்குள் முகவரி மாற்றத்திற்கான மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து ஓட்டுச்சாவடிகளிலும், ஆன்-லைன் மூலமும் பெறப்பட்டன.
இந்த விபரங்கள் சரிபார்க்கப்பட்டு வாக்காளர் பட்டியல் ஜன.,5ல் வெளியிடப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக புதிதாக பெயர் சேர்த்த வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜன.,25ல் கலர் பிளாஸ்டிக் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.மாவட்ட தேர்தல் பிரிவு உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“தேசிய வாக்காளர் தினத்தில் அடையாள அட்டை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய நாளில் வாக்காளர்கள் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளன,”என்றார்.
No comments:
Post a Comment