தமிழகத்தில் 10 ஆண்டுகளில் புதிய ஓய்வு திட்டத்தில் பணிக்கு சேர்ந்த 2000 பேர் ஓய்வு பெற்றும், இறந்த 1000 பேர் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் உட்பட எந்த பயனும் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர்.இந்தியாவில் மேற்கு வங்காளம், திரிபுரா மாநிலத்தை தவிர்த்து அனைத்து மாநிலத்திலும் புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய அரசால் 2004 ஜன., யில் கொண்டு வரப்பட்டாலும், தமிழகத்தில் 2003 ஏப்ரலில் முன் தேதியிட்டு அறிமுகப்படுத்தினர்.மத்திய அரசு பணிக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிநியமனம் பெற்றோரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதிய ஓய்வூதியதிட்டத்தின் கீழ் பணிக்கு சேர்ந்தவர்களில் 2000 பேர் ஓய்வு பெற்று விட்டனர், 1000 பேர் இறந்து விட்டனர். இவர்களது குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம், பணிக் கொடை எதுவும் தமிழக அரசு வழங்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன் கூறுகையில், "
புதிய ஓய்வூதிய திட்டம் இந்தியா முழுவதும் பொதுவானது என தமிழக அரசு கூறுகிறது. தமிழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு போல் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்,” என்றார்.
No comments:
Post a Comment