இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, November 06, 2014

பிளஸ் 1 வகுப்பு: அடுத்த கல்வியாண்டிலும் புதிய பாடத் திட்டத்துக்கு வாய்ப்பில்லை?


பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் திணறி வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டிலும் (2015-16) பிளஸ் 1 வகுப்புக்கான பழைய பாடத் திட்டம் மாற்றப்படாது எனத் தெரிகிறது.

பிளஸ் 1 வகுப்புக்கு 2014-15-ஆம் கல்வியாண்டிலும், பிளஸ் 2 வகுப்புக்கு 2015-16-ஆம் கல்வியாண்டிலும் பாடத் திட்டங்களை மாற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், பல்வேறு காரணங்களால் இது தள்ளிப்போனது. பிறகு, பிளஸ் 1 வகுப்புக்கு 2015-16-ஆம் ஆண்டிலிருந்தும், பிளஸ் 2 வகுப்புக்கு 2016-17-ஆம் ஆண்டிலிருந்தும் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், புதிய பாடத் திட்டம் அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டு ஓராண்டாகியும் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, அடுத்த கல்வியாண்டிலும் புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

தொழில் பிரிவுப் படிப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறவே தடுமாறுகின்றனர். இதை மனதில் வைத்தே கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு பாடத் திட்டங்களில் இந்த முறை பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

புதிய பாடத் திட்டத்துக்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டாலும்கூட, பாடப் புத்தகங்களை எழுதுதல், பிழை திருத்துதல், வடிவமைப்பில் மாறுதல் என புத்தகம் எழுதும் பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் 4 முதல் 6 மாதங்கள் வரை ஆகும்.

அதன் பிறகு, புத்தகங்களை அச்சிட வழங்க வேண்டும். எனவே, அடுத்த கல்வியாண்டில் புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்துவது மிகவும் கடினம் என வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்போதுள்ள பிளஸ் 1 பாடத் திட்டம் 2004-05 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத் திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழையப் பாடத் திட்டமே தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

புத்தகம் எப்போது? முப்பருவ முறையின் கீழ் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மூன்றாவது பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் மாதத்தில் பிளஸ் 2 புத்தகங்களை அச்சிடும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. பிளஸ் 1 பாடத் திட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்ட பிறகு, அவற்றை அச்சிடும் பணிகள் தொடங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

துணைக் குழு: இதற்காக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 24 பாடங்களுக்கான பாடத் திட்டத்தை மாற்றியமைப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷண ராவ் தலைமையில் துணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தத் துணைக்குழு மேல்நிலைக் கல்வி பாடத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக 24 பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வு செய்து புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியது. இந்தப் பாடத் திட்டத்துக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பொறுப்பை அப்போது கூடுதலாக வகித்த அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையிலான வல்லுநர் குழு கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து, அந்தக் குழுவின் ஆலோசனைகளின்படி, புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அனுப்பப்பட்டது.

No comments:

Post a Comment