"பள்ளித் தலைமையாசிரியர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உண்டு உறைவிடப் பயிற்சி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாநிலச் பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அளவில், அனைத்து மாவட்டத் தலைநகரிலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஃபிப்ரவரி, 4-7, 11-14 மற்றும், 18-19 என்ற அளவில், பத்து நாட்கள் நடக்க உள்ள உண்டு உறைவிடப் பயிற்சியை ரத்து செய்ய வேண்டும்.அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சி நடக்கிற தகவல் அறிந்து, பள்ளித் தலைமையாசியிர்கள், பெருத்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான தலைமையாசிரியர்கள் பெண்களாக இருப்பதும், அவர்கள், தங்களது கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை பணிக்கனுப்புதல், குழந்தைகளை தயார்படுத்தி பள்ளிக்கு அனுப்புதல் போன்ற இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்.
ஒரு குடும்பத்தில், கணவன் மற்றும் மனைவி இருவரும் பள்ளித் தலைமையாசிரியர்களாக இருப்பின், அவர்களின் குடும்பம் அன்றாட நடைமுறை வாழ்நிலையில் பெருத்த இன்னல்களுக்கும், நடைமுறைச் சிக்கல்களுக்கும் உள்ளாகும் அபாயம் பயிற்சியினால் ஏற்பட்டுள்ளது. பள்ளித் தலைமையாசிரியர்களின் குடும்பச் சூழ்நிலை, குழந்தை பராமரிப்பு போன்ற வேண்டுகோளை ஏற்று, உண்டு உறைவிடப்பயிற்சியை ரத்து செய்து, தற்போது நடைமுறையில் உள்ளதுபோல், 9.30 முதல், 4.30 மணி வரையிலான கால அட்டவணையைக் கொண்டு அந்தந்த வட்டார வளமையத்தில் பணியடைப் பயிற்சி வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment