தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை மறுநாள், துவங்குகிறது. 8.5 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு எழுதுகின்றனர். தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும், தேர்வுத்துறை முழுவீச்சில் முடித்து, தயார் நிலையில் உள்ளது.கடந்த ஆண்டு பொதுத்தேர்வை, 7.56 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இந்த ஆண்டு, 49 ஆயிரம் பேர் கூடுதலாக எழுதுகின்றனர்.
இவர்களுடன், தனித்தேர்வு மாணவர், 45 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர். பள்ளி மற்றும் தனித்தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து, 8.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். நாளை மறுநாள் ஆரம்பம்:மார்ச், 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 2,044 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன.கடந்த, 20ம் தேதி, தாலுகா தலைமையிடம் வாரியாக, கேள்வித்தாள் கட்டுகள், பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட மையங்களில், 24 மணிநேர போலீஸ் பாதுகாப்புடன், கேள்வித்தாள் கட்டுகள் வைக்கப்பட்டுள்ளன
. 960 பறக்கும் படை:மாவட்டத்திற்கு, 30 பறக்கும் படை குழுக்கள் வீதம், 32 மாவட்டங்களிலும், 960 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பெரிய மாவட்டங்களில், குழுக்களின் எண்ணிக்கை, சற்று கூடுதலாக இருக்கும் எனவும், அவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட கலெக்டர், எஸ்.பி., - ஆர்.டி.ஓ., - சி.இ.ஓ., - டி.இ.ஓ., - தாசில்தார் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் தலைமையில், பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அறிவியல், கணிதம் தேர்வுகளின் போது, இந்த குழுக்களுடன், கூடுதலாக அண்ணா பல்கலை பேராசிரியர் குழுவும், தேர்வை பார்வையிட உள்ளது. கல்வித்துறை இணை இயக்குனர்கள், மாவட்டங்களில் பார்வையிடவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு இணை இயக்குனருக்கும், ஒன்று அல்லது இரு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதேபோல், அனைத்து மாவட்டங்களும், அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. தேர்வு முடியும் வரை, சம்பந்தபட்ட மாவட்டங்களில் இருந்து, தேர்வை சுமூகமாக நடத்த வேண்டும் எனவும், முறைகேடுகள் எதுவும் நடக்காதபடி கண்காணிக்க வேண்டும் எனவும், தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.-
No comments:
Post a Comment