இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, February 14, 2013

குரூப்–1 முதல்நிலை தேர்வு: 25 காலி இடங்களுக்கு 1¼ லட்சம் பட்டதாரிகள் போட்டி -

  துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக குரூப்–1 முதல்நிலை தேர்வு  (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் 1¼ லட்சம் பட்டதாரிகள் கலந்து கொள்கிறார்கள். புதிய பாடத்திட்டம் குரூப்–1 தேர்வுக்கான பாடத்திட்டமும், தேர்வுமுறையும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. குரூப்–1 தேர்வு, முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களை கொண்டது ஆகும். தற்போது முதல்நிலை தேர்வில் புதிதாக ‘ஆப்டிடியூடு’ என்ற ஆய்வுத்திறன் பகுதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

முன்பிருந்த 200 பொது அறிவு கேள்விகளின் எண்ணிக்கை 150 ஆக குறைக்கப்பட்டு ஆப்டிடியூடு பகுதியில் இருந்து 50 வினாக்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அதேபோல், மெயின் தேர்வில் முன்பு 2 பொது அறிவு தாள்கள் மட்டும் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் தலா 300 வீதம் மொத்தம் 600 மதிப்பெண். புதியமுறையில் கூடுதலாக ஒரு பொதுஅறிவு தாள் சேர்க்கப்பட்டு மொத்த மதிப்பெண் 900 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆங்கில மொழித்திறனை சேர்க்கும் வகையில் புதிய பாடத்திட்டமும் இணைக்கப்பட்டு உள்ளது.

புதிய முறையில், நேர்முகத்தேர்வு மதிப்பெண் 80–லிருந்து 120 அதிகரித்து இருக்கிறார்கள். முதல்நிலை தேர்வு நாளைமறுநாள் நடக்கிறது இந்த நிலையில், துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. வணிகவரி உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஒரு லட்சத்து 29 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் தகுதி உடையவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த லையில், புதிய பாடத்திட்டம், தேர்வுமுறை மாற்றத்துடன் கூடிய முதல் குரூப்–1 தேர்வு (முதல்நிலைதேர்வு) நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் 33 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. 25 இடங்களுக்கு 1¼ லட்சம் பேர் போட்டி ஏறத்தாழ ஒன்றே கால் லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுதுகிறார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் 26 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொள்கின்றனர். மதுரை, சேலம், கோவை, திருச்சி ஆகிய இடங்களில் தலா 5 ஆயிரம் பேரும், விழுப்புரத்தில் 5,500 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். குரூப்–1 முதல்நிலை தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் தெரிவித்தார். வழக்கம்போல் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வர்கள் எழுதுவது வீடியோவில் பதிவுசெய்யப்படும். அனைத்து மையங்களையும் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது

. ஒரே மாதத்தில் தேர்வு முடிவு டி.என்.பி.எஸ்.சி. வருடாந்திர தேர்வு பட்டியலின்படி, குரூப்–1 முதல்நிலை தேர்வு முடிவு அடுத்த மாதம் (மார்ச்) வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு மே மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதன் முடிவு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்டு மாதம் நேர்முகத்தேர்வு நடத்தி ஆண்டு இறுதிக்குள்ளாகவே நியமன பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment