ரயில் பயணிகளுக்கு, இனி, ஆறு மாதம் மற்றும் ஒரு ஆண்டுக்கு மட்டுமே, சீசன் டிக்கெட் வழங்குவது என, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில்களில் தினமும் பயணம் செய்வோர், ஒரு மாதம் மற்றும் மூன்று மாதம் என்ற அளவில், தற்போது சீசன் டிக்கெட் வாங்கி பயணம் செய்கின்றனர். இதில், மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆறு மாதம் மற்றும் ஒரு ஆண்டு என்ற அளவில் மட்டுமே, இனி, சீசன் டிக்கெட் வழங்கப்படும்
. ஒரு ஆண்டுக்கு சீசன் டிக்கெட் வாங்கினால், 10 மாதம், 8 நாட்களுக்கான கட்டணத் தொகையே, சீசன் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆறு மாதத்திற்கான சீசன் டிக்கெட் வாங்கினால், ஐந்து மாதம், 4 நாட்களுக்கான கட்டணத் தொகையை செலுத்தி, சீசன் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில், சீசன் டிக்கெட் பெறும் பயணிகளுக்கு, ஒரு முறை செலுத்திய கட்டணத் தொகை, எந்தக் காரணத்திற்காகவும் திருப்பித் தரப்பட மாட்டாது. மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும், சீசன் டிக்கெட்டுகள், தொடர்ந்து வழங்கப்படும். சீசன் டிக்கெட் பெறுவதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், ஏப்ரல், 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். இத்தகவல், மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment