இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, February 25, 2013

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு புதிய முறையில் அறிவியல் கற்பிப்பு

அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர், அறிவியலை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், புதுமையான திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.ஆசிரியர் குழுவினர், பாடங்கள் சம்பந்தபட்ட பொருட்களுடன், பள்ளி வாரியாக நேரில் ஆஜராகி மாணவ, மாணவியருக்கு கண்காட்சி மற்றும் செய்முறை விளக்கங்களுடன், அறிவியலை கற்பிக்கின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கல்வியின் தரத்தை மேம்படுத்த, பல்வேறு வகையான யுக்திகளை கல்வித் துறை கையாண்டு வருகிறது.சிறப்பு வகுப்புகள், பாடங்களில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு பாடம் கற்பித்தல், பல்வேறு வகையான கற்பித்தல் உபகரணங்களைக் கொண்டு பாடங்களை கற்பித்தல் என, பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இந்த வரிசையில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், புதுமையான கற்பித்தல் திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.சென்னையைச் சேர்ந்த, "ஈவன்ட் எஜூ சிஸ்டம்' என்ற நிறுவனத்துடன் இணைந்து,

இத்திட்டத்தை முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40 பள்ளிகளில் செயல்படுத்தியது. பயிற்சி பெற்ற ஆசிரியர் குழு, 40 அறிவியல் உபகரணங்களைக் கொண்டு, பள்ளி வாரியாக சென்று மாணவ, மாணவியருக்கு, அறிவியலைப் பற்றி விளக்கியது.பயிற்சி குழுவைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அன்பழகன் கூறுகையில், ""காந்தத்தின் பண்புகள் என்றால், காந்தங்களின் வகைகளை காட்டி, அவற்றின் செயல்பாடுகளை விளக்குகிறோம். மலரின் பாகங்கள் எனில், மிகப்பெரிய மலரை, மாணவர்கள் முன் வைத்து, அதன் ஒவ்வொரு பாகங்களையும், தனித்தனியாக காட்டி விளக்குகிறோம். இதேபோல், பல கண்காட்சிகளை நடத்தும் திட்டங்கள் உள்ளன,'' என்றார்.இத்திட்டம் மாணவ, மாணவியர் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்ததாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்த, தொடக்க கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment