இந்த 2013-14ம் நிதியாண்டிற்காக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், கல்விக்காக, கடந்தாண்டைவிட கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவளத் துறைக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி என்பது அரசின் உயர்ந்தபட்ச முக்கியத்துவத்தைப் பெற்ற துறையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 2013-14ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட், நாட்டு இளைஞர்கள், கல்வியையும், திறன்களையும் பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, அவர்கள் நல்ல பணி வாய்ப்புகளைப் பெற்று, அதன்மூலம் போதுமான வருமானத்தையும், ஒரு பாதுகாப்பான நல்ல வாழ்க்கையை பெறும் நோக்கத்தையும் கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கல்விக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள்
* மத்திய மனிதவளத் துறைக்கு, ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட, 17% அதிகம்.
* சர்வ சிக்ஷா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,258 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மேலும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான்(RMSA) திட்டத்திற்கு, ரூ.3,983 கோடிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 26.6% கூடுதலாகும
். * மதிய உணவு திட்டத்திற்கு ரூ.13,215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * மருத்துவக் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக, ரூ.4,727 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * மேலும், பொது வரிகளிலிருந்து, கல்விக்கு ஒதுக்கும் தொகை, 3% என்ற அளவிலேயே தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளு.
* நாளந்தா பல்கலைக்கழகத்தை புனர் நிர்மாணம் செய்யும் முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. * இதைத்தவிர, SC/ST, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஆயிரக்கணக்கான உதவித்தொகை திட்டங்கள் பற்றி மக்களவை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டது.