் சென்னை மற்றும் ஸ்ரீரங்கம் பள்ளிகளில் அரசின் உத்தரவுப்படி அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு சத்துணவில் வெஜிடபிள் பிரியாணி வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் நலன் கருதி 13 வகையான கலவை சாதங்கள் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சத்துணவு திட்டத்தில் மதிய உணவிற்கு வெஜிடபிள் பிரியாணி போன்ற புதிய உணவுகளை தயாரிக்க சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் பணிபுரியும் சமையலர்களுக்கு பிரபல சமையல் கலைஞர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். இப்பயிற்சி இந்த வாரத்தில் முடிகிறது. எனவே அடுத்த வாரத்தில் புதிய சத்துணவு முறை அமலுக்கு வருகிறது. முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையத்தில் மட்டும் புதிய சத்துணவு வழங்கப்படும். இதன் வெற்றியை தொடர்ந்தே மற்ற பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியிலும், ஸ்ரீரங்கத்தில் உள்ள அந்தநல்லூர் பள்ளியிலும் இந்த திட்டம் அறிமுகமாகிறது.
No comments:
Post a Comment