இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, November 12, 2012

ஆசிரியர் காலியிட பட்டியல் வெளியிடப்படுமா : தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்ப்பு

  இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலியிட பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட வேண்டும் என, டிஇடி, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்

நியமனம் : டிஇடி, தேர்வு வழியாக, 25 ஆயிரம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். ஜூலையில் நடந்த டிஇடி, தேர்வில், 2,448 பேர் தேர்வு செய்யப்பட்டனர்அக், 14ல் நடந்த, அடுத்த தேர்வில், 19 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர் இவர்களில், முதலில், 2,448 பேர், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்அடுத்ததாக, 19 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்படுவர்மேலும், 2,900 முதுகலை ஆசிரியரும், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்பாட வாரியாக உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையை, டிஆர்பி, வெளியிடாமல் உள்ளதுமேலும், மாவட்ட வாரியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களின் பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை வெளியிடவில்லை

இணையதளம் : காலியிடங்கள் விவரங்களை, இணையதளத்தில், இரு துறைகளும் வெளியிட்டால், இப்போதே, தங்களுக்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்ய வசதியாக இருக்கும் என, ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள் கருதுகின்றனர்இடைநிலை ஆசிரியர், பதிவுமூப்பு அடிப்படையிலும், இதர வகை ஆசிரியர்கள், மதிப்பெண் அடிப்படையிலும் நியமிக்கப்பட உள்ளனர்அதனால், காலியிட பட்டியலை வெளியிட்டால், தகுதி வரிசைப்படி, எந்த இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை, இப்போதே தெரிந்துகொள்ள முடியும் எனவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்

ஆன்-லைன் : வழக்கமாக, கலந்தாய்வு நடக்கும் இடத்தில், ஒரு மணி நேரம் முன்பு, காலி பட்டியல் வெளியிடப்படுகிறதுஇதனால், பட்டியலை பார்ப்பதற்கு, தேர்வு பெற்றவர்கள், முட்டி மோதும் நிலை இருக்கிறது. சமீபகாலமாக, "ஆன்-லைன்' வழியாக, கலந்தாய்வு நடந்து வருவது, மேற்கண்ட பிரச்னையை தீர்க்கும் என்றாலும், காலியிட பட்டியலை, இப்போதே வெளியிட வேண்டும் என்பது, தேர்வு பெற்றவர்களின் கோரிக்கையாக உள்ளது இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் கூறுகையில்,"காலியிட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனமுழுமையான விவரங்கள் கிடைத்ததும், இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தன

No comments:

Post a Comment