கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு பணியாளர் நியமனம் செய்ய உள்ளதால் தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் 3,589 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்படவுள்ளன. இதனால், விண்ணப்பதாரர்களிடம் இருந்து கூட்டுறவு சங்கங்களின் மாநில அள் சேர்ப்பு மையத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பம் கிடைக்கும் இடம்: கடலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, கடலூர்(தலைமையிடம்). இவ்வங்கியின் கடலூர் முதுநகர், திருப்பாப்புலியூர், கூத்தப்பாக்கம், மஞ்சக்குப்பம், புவனகிரி, சிதம்பரம், எறையூர், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, மந்தாரக்குப்பம், நெல்லிக்குப்பம், நெய்வேலி மெயின் பஜார், 5-வது வட்டம். பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி, தொழுதூர், வடலூர், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, செம்மண்டலம், புதுப்பாளையம் ஆகிய கிளைகளில் வேலை நேரத்தில் இலவசமாக கிடைக்கும். இணையதள முகவரி: ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீர்ர்ல்ள்ழ்க்ஷ.ர்ழ்ஞ் என்ற இணையதள முகவரியில் சென்று 108.179.198.54-ல் உள்ள விண்ணப்பத்த்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் (ன்ல்ப்ர்ஹக்) செய்து அனுப்பலாம். முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.
இல்லையெனில் பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டையுடன், தலைவர், கூட்டுறவுச் சங்கங்களின் மாநில ஆள் சேர்ப்பு நிலையம், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், என்.வி.நடராஜன் மாளிகை, எண்.170, பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600 010 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் நவம்பர் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக கிடைக்க வேண்டும். கட்டணம்: தேர்விற்கான விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்து தேர்வுக்கான கட்டணம் ரூ.250 ஆகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இதில் விலக்களிக்கப்படும். கட்டணம்
செலுத்தும் முறை: மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் "மாநில ஆள் சேர்ப்பு நிலையம், சென்னை-10 (நற்ஹற்ங் தங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற் ஆழ்ன்ங்ஹன், இட்ங்ய்ய்ஹண்-10)' என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக எடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் வரைவோலை பெற்று, சான்றொப்பம் பெற்ற சாதி சான்றிதழுடன் தனியாக கடிதம் மூலம் மாநில ஆள் சேர்ப்பு நிலைய முகவரிக்கு வரும் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment