் மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மாதிரி பட்டியல், பொது மக்களின் பார்வைக்காக, அடுத்த மாதம் வைக்கப்படுகிறது. அவற்றில், தவறுகள், ஆட்சேபம் ஏதேனும் இருப்பின், 30 நாட்களுக்குள், அவற்றை திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
மக்களின் பொருளாதார நிலை மற்றும் ஜாதிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி, டிசம்பர், 2011ல் துவங்கி, கடந்த இரு மாதங்களுக்கு முன் முடிந்தது. மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பப்படும், இக்கணக்கெடுப்பை, கணினியில் பதிவு செய்ய, புதிய மென்பொருளை மத்திய அரசு தயார் செய்துள்ளது. இந்த மென்பொருளை, முழு வடிவத்தில் மாநில அரசுகளுக்கு அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், கணக்கெடுப்பு விவரங்களை கணினியில் பதிவு செய்யப்படவில்லை. தற்போது, மத்திய அரசின் மென்பொருள் பெறப்பட்டு, கணினியில் பதிவு செய்யும் பணிகளை, மாநில அரசு துவங்கியுள்ளது. இப்பணிகளை, அடுத்த மாத இறுதியில் முடிக்கும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்பின், வார்டு வாரியாக, கணக்கெடுப்பின் மாதிரி பட்டியல், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என, உள்ளாட்சித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மாதிரி பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, கருத்துக்கள் பெறப்படுகின்றன. இக்கருத்துக்களைக் கொண்டு, கணக்கெடுப்பில் திருத்தங்கள் செய்த பின், இறுதிப் பட்டியல், அடுத்தாண்டு பிப்ரவரி இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், அந்த அதிகாரி தெரிவித்தார். சமூக பொருளாதார கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பும் முடிந்துள்ளது.
இந்நிலையில், கணக்கெடுப்பு மாதிரிப் பட்டியலில், ஜாதிகள் இடம்பெறாது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள், ஜாதியை சொல்வது, அவர்களின் விருப்பத்துக்குட்பட்டது. அவர் கூறும் ஜாதிகளை ஆதாரம் மூலம் நிரூபிக்கவில்லை . கணக்கெடுப்பில் சேர்க்கபப்பட்ட ஒருவர் என்ன ஜாதியை சார்ந்தவர் என்பதை, ஒப்பிட்டு சீர் செய்ய, அரசிடம் உரிய ஆதாரங்கள் இல்லை. ஆகவே, ஜாதிவாரி கணக்கெடுப்பில் கூறப்பட்ட ஜாதிகள், மாதிரிப் பட்டியிலில் இடம் பெறாது. மத்திய அரசின் கவனத்துக்கு மட்டும், அது கொண்டு செல்லப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். மாதிரி பட்டியலில் உள்ள விவரங்கள், தவறாக இருந்தால், அதை திருத்தவும், தகவல்களை நீக்கவும், தகவல்களை சேர்க்கவும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்படவுள்ளன. அதற்காக, பட்டியலில் வீட்டு உபயோகப் பொருள்கள் குறித்த தகவல்கள் தவறாக இருந்தால், அதைத் திருத்த, படிவம் - ஏ, குடும்ப உறுப்பினர் பற்றிய தவறான தகவல்களை திருத்த, படிவம் - பி, விடுபட்ட வீட்டு உபயோகப் பொருள்களை சேர்க்க, படிவம் - சி, குடும்ப உறுப்பினர்கள் பற்றிய, கூடுதல் தகவல்களை சேர்க்க, படிவம் - டி ஆகியவை அளிக்கப்படுகின்றன. மாதிரிப் பட்டியல் வெளியிட்ட, 30 நாள்களுக்குள், ஆட்சேபனைகளை அளிக்க வேண்டும். அடுத்த, 22 நாள்களில், திருத்தங்களை செய்து முடிக்க வேண்டும். மாதிரி பட்டியல் வெளியிட்ட, 52 நாள்களில் இறுதிப் பட்டியலை வெளியிட வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment