இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, November 14, 2012

வீட்டுக் கடன் பெற ஆண்டு வருவாய் உச்சவரம்பு அதிகரிப்பு

  பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் மற்றும் குறைந்த வருவாய் உடையவர்கள் ஆகியோருக்கு, வீட்டுக் கடன் பெறுவதற்கான, ஆண்டு வருவாய் உச்சவரம்பை, ஒரு லட்சம் ரூபாயாக, மத்திய அரசு உயர்த்தியுள்ளது. டில்லியில், "ஹட்கோ' சார்பில் நடைபெற்ற "பில்ட்டெக்' 2012 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத்துறை அமைச்சர் அஜய் மக்கான், கூறியதாவது:

""பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளவர்களுக்கு, தற்போது, வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடன் பெற, ஆண்டு வருவாய், 60 ஆயிரம் இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பு உள்ளது. இனி, இந்த உச்சவரம்பு, ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும். அதுபோல், குறைந்த வருவாய் பெறுபவர்களுக்கு, 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும். இதன் மூலம், ஒரு லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருவாய் பெறுபவர்கள், "ராஜிவ் அவாஸ் யோஜனா' என்ற இத்திட்டத்தின் கீழ், வீட்டுக் கடன் பெறலாம். இதன் மூலம், போலியான வருவாய் சான்றிதழ்கள் சமர்ப்பித்து, வங்கிகளில் கடன் பெறுவது தவிர்க்கப்படும்.

இத்திட்டம் மூலம், 20 லட்சம் பேர், பயன்பெறுவார்கள். 12வது ஐந்தாண்டு திட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இப்புதிய உச்சவரம்புகள் குறித்து, வங்கிகள் மற்றும் மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்படும். இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்தும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment