"ரயிலில் அனைத்து வகுப்பு பயணிகளும், பயணத்தின் போது, வரும் டிச.,1ம் தேதி முதல், ஒரிஜினல் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயிலில், "ஏசி'முதல் வகுப்பு, "ஏசி' 2ம் வகுப்பு, "ஏசி., மூன்றாம் வகுப்பு, "ஏசி' சேர்கார் வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகள் ஒரிஜினல் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் பயணம் செய்பவர்கள் ஒரிஜினல் அடையாள அட்டை தேவையில்லை.ரயில் டிக்கெட் முன்பதிவுகளில், இரண்டாம் வகுப்பு முன்பதிவு டிக்கெட்டுகளில், பயணிகள் முறைகேடாக பயணம் செய்வது அதிகரித்துள்ளது என, ரயில்வே நிர்வாகத்திற்கு புகார்கள் வந்ததால், வரும் டிச.,1ம் தேதி முதல், அனைத்து வகுப்பு பயணிகளும், பயணத்தின் போது ஒரிஜினல் அடையாள அட்டை அவசியம் கொண்டுவர வேண்டும், பயணத்தின் போது, டிக்கெட் பரிசோதகரிடம் அடையாள அட்டை காண்பிக்கப்பட வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட்ட, போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, வங்கி கிரடிட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, போட்டோவுடன் கூடிய தேசிய வங்கிகளின் அடையாள அட்டை, பாஸ்போர்ட், போட்டோவுடன் கூடிய மாணவர்கள் அடையாள அட்டை, பொதுதுறை நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட போட்டோவுடன் கூடிய ஒரிஜினல் அடையாள அட்டை இவைகளில் ஒன்றினை, ரயில் பயணத்தின் போது, பயணிகள் கொண்டு வரவேண்டும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது
.ரயிலில் பயணம் செய்ய இ.டிக்கெட், ஐ.டிக்கெட், தத்கால் டிக்கெட், மற்றும் ரயில் டிக்கெட் மையங்களில் ,டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவருக்கும் இக்கட்டுப்பாடு பொருந்தும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment