இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 13, 2012

குழந்தைகள் - நாட்டின் மன்னர்கள் : -இன்று தேசிய குழந்தைகள் தினம-Dinamalar article

் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. இவரது பிறந்த தினம் (நவ.,14), தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது இவர் அன்பு கொண்டிருந்தார். குழந்தைகளும் அவரை "நேரு மாமா' என அழைத்தனர். இத்தினத்தில், பள்ளிகளில் பேச்சுப் போட்டி, கவிதை, ஓவியப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1889 நவ., 14ல் அலகாபாத்தில் நேரு பிறந்தார். பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம் அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் இவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன. இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சரியான அடித்தளம்நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தை பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தை பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே உதவும் மனப்பான்மை வளரும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்து கொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.

No comments:

Post a Comment