இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, November 05, 2012

தொல்லை தரும் குறுந்தகவல் "டிராய்' புதிய கட்டுப்பாடு

மொபைல்போனுக்கு அனுப்பப்படும், தொல்லை தரும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு (குறுந்தகவல்) கட்டுப்பாடு விதித்து, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, "டிராய்' உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மொபைல்போன்களில், மொபைல்போன் நிறுவனங்கள், சில சலுகைகளுடன் வழங்கும் எஸ்.எம்.எஸ்., மூலம், சில நிறுவனங்கள், தங்களது வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன.

இதையொட்டி, வாடிக்கையாளர்களுக்கு கணக்கிலடங்கா எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பி, தொல்லை கொடுத்து வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளன.இந்நிலையில், 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பும் ஒவ்வொரு தகவலலுக்கும் இனி, 50 பைசா கட்டணம் செலுத்த வேண்டும் என, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான "டிராய்', நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, டெலிமார்க்கெட்டிங்கில் ஈடுபடும், பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மொபைல்போன் வாடிக்கையாளர்களை இந்த உத்தரவு கட்டுப்படுத்தாது என்றும், "டிராய்' தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, "டிராய்' முதன்மை ஆலோசகர் பரமேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த புதிய உத்தரவு, இரண்டு வாரத்திற்குள் நடைமுறைபடுத்தப்படும். இது, ஆரம்பகட்ட நடவடிக்கை தான். இதுபோல், இன்னும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்த பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து, மூன்று மாதத்திற்குள் தெரிவிக்கும்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.அதாவது, வர்த்தக ரீதியில், ஒரே மாதிரியான எஸ்.எம்.எஸ்.,கள் அனுப்பப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

.இருப்பினும், தங்கள் நிறுவனத்தை முறையாக பதிவு செய்து, வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொல்லை தரும் விளம்பரங்கள் குறித்து, மொபைல்போன் வாடிக்கையாளர்கள், யுசிசி என, டைப் செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் போன் எண் மற்றும் தேதி போன்ற விவரங்களை டைப் செய்து, 1909 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் புகார் அளிக்கலாம்.

No comments:

Post a Comment