இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, November 04, 2012

எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றுகள் வழங்க புதிய நடைமுறை:பொய்ச் சான்றிதழ் பெற்றால் தண்டனை நிச்சயம்

பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும், ஜாதி சான்றிதழ்களை சரிபார்க்க, மண்டல அலுவலகங்களை, தமிழக அரசு அமைக்கிறது.வருவாய் துறையினரிடமிருந்த, எஸ்.சி., - எஸ்.டி., சான்றிதழ்கள் வழங்கும் பணி, இதன் மூலம் காவல் துறைக்கு மாற்றப்படுகிறது. "போலி சான்றிதழ்களைத் தடுப்பதற்காக, இந்நடவடிக்கை' என்று, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.மண்டலங்கள்:எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி, சென்னை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களை தலைமைஇடங்களாக கொண்டு, மண்டல அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும், ஒரு முதுநிலை, டி.எஸ்.பி., தலைமையில், ஒரு இன்ஸ்பெக்டர் அல்லது சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் நியமிக்கப்படுகின்றனர்.மாநிலம் மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்கப்படும், எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றிதழ் கோரும் விண்ணப்பங்கள், மண்டல அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்படும்.மண்டல அலுவலகத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் அல்லது சப்-இன்ஸ்பெக்டர், விண்ணப்பதாரரின் முகவரிக்கு சென்று, விவரங்களை சேகரித்து, விண்ணப்பத்தின் உண்மைத் தன்மையை, மாநிலம் மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரி களுக்கு அனுப்பி வைப்பார். பயிற்சி:இந்த பரிந்துரையின் அடிப்படையில், எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பணிகளுக்கு நியமிக்கப்படும் போலீசார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனரின் கீழ் பணிபுரிவர்.இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் குறித்து, ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:எஸ்.சி., - எஸ்.டி., சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களின் உண்மைத் தன்மையை அறிய, மாநில அளவில் உள்ள கண்காணிப்புக் குழு ஆய்வு செய்கிறது. இதற்கு, நீண்ட காலமாவதோடு, விண்ணப்பதாரரின் விவரங்களை முழுமையாகவும் கண்டறிய முடிவதில்லை.

இதற்காக, சுப்ரீம் கோர்ட் அளித்து உள்ள வழிகாட்டுதல்கள் படி, மண்டல அளவில் மையங்கள் அமைக்கப்படுகின்றன.இம்மையங்களில் நியமிக்கப்படுவோருக்கு, எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினர் பற்றிய முழுவிரங்களை அறிந்து கொள்ள, முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால், உரிய சான்றிதழ் வழங்குவது எளிதாகும்.தாற்காலிக சான்று இப்புதிய நடைமுறை மூலம், எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றிதழ்கள் வழங்க ஏற்கனவே இருக்கும் நடைமுறை கைவிடப்படும். புதிய முறையில், சான்றிதழ்கள் பெற, குறைந்தது ஒரு மாதமாகும். இதனால், ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, தற்காலிக சான்றிதழ் முதலில் வழங்கப்படும். மண்டல அலுவலகம்;பரிந்துரையில் அளிக்கப்படும் சான்றிதழ்களே இறுதியானது.

தண்டனை:சான்றிதழ் கோருபவர் பொய்யான தகவல்களை அளித்தால், அவர் இந்திய தண்டனை சட்டத்தில் தண்டிக்கப்படவும், மண்டல அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.பொய்யான தகவல்கள் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அவர் உள்ளாட்சி, சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கப்படும். மண்டல அலுவலகங்கள் ஏற்படுத்தவும், போலீசாரை நியமிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.-

No comments:

Post a Comment