இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, November 21, 2012

இணைய வழியில் 6,500 பேர் பணி நியமனம்

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 6,524 பேரை, இணையதள வழியில் பணி நியமனம் செய்யும் கலந்தாய்வு, நேற்று துவங்கியது.கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, 2 சதவீத பணி வாய்ப்பு வழங்க, அரசுஉத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, 25 முதுகலை ஆசிரியர், வேதியியல்பட்டதாரி ஆசிரியர்கள், 14 பேர், முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி வரை, பல்வேறு பணி நியமனக் கலந்தாய்வு நடக்கிறது.தாங்கள் பணிபுரியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்தபடி, இணையதளம் வழியாக, கலந்தாய்வில் சம்பந்தப்பட்டவர்கள் பங்@கற்றனர்.வழக்கமாக, பணி நியமனம், பதவி உயர்வுக் கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு என, எல்லாமே, சென்னையில் நடக்கும்.

இதற்கு, மாநிலம்முழுவதிலும் இருந்து,ஆசிரியர்கள் சென்னைக்கு வருவது வழக்கம்.பள்ளிக் கல்வி இயக்குனராக தேவராஜன் பதவியேற்றதில் இருந்து, அனைத்து கலந்தாய்வுகளும், இணையதளம் வழியாக நடந்து வருகிறது. ஏற்கனவே, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனராக இவர் இருந்தபோது, அத்துறையில், இணையவழி கலந்தாய்வுத் திட்டத்தை அமல்படுத்தினார்.அதே நடைமுறை, தற்போது பள்ளிக் கல்வித் துறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment