இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, July 08, 2018

ஜெனரிக் மருந்துகள் பரிந்துரை தொடரும் காத்திருப்பு...


மக்களின் வசதிக்காகவும், அவர்கள் தெரிந்து கொள்ளும் வண்ணமும் மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை (அடிப்படை மூலக்கூறு மருந்துகள்) மருந்துச் சீட்டில் (பரிந்துரை சீட்டு) எழுத வேண்டும் என்கின்ற மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தின் நிலைப்பாடு, நடுத்தர மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், மருத்துவர்கள், பிராண்டட் மருந்துகளை விற்கும் வர்த்தக நிறுவனங்கள், மருந்தக உரிமையாளர்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை பெறும் வகையில் நாடு முழுவதும் "ஜன் ஒளஷதி' என்ற பெயரில் ஜெனரிக் மருந்துகள் விற்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பிராண்ட் பெயர் மருந்துகளைத் தவிர்த்து, அனைத்து மருத்துவர்களும் அடிப்படை மூலக்கூறு மருந்துகளை பரிந்துரை செய்யும் பட்சத்தில், குறைந்த விலையில் தரமான மருந்துகள், தகுதியான மருத்துவம் மக்களுக்கு கிடைக்கும் என மத்திய அரசு நம்புகிறது. அடிப்படை மூலக்கூறு பெயரில் விற்பனையாகும் மருந்தின் விலை குறைவாக இருக்கும். மருத்துவர்களிடையே இதற்கான பிரசாரம் இருக்காது. இதற்கென விற்பனை பிரதிநிதி இருக்க மாட்டார்.

மருத்துவர்கள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு இலவச சலுகைத் திட்டங்கள் இருக்காது. இம்மருந்துகளை சந்தைப்படுத்த அதிக செலவு ஆகாததால், இத்தகைய மருந்துகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிகிறது. மருந்துகள் மட்டுமல்லாமல், சில வகை மருத்துவ உபகரணங்களின் விலையும் குறைவாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எடுத்துக்காட்டாக, உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ளும் டிஜிட்டல் மீட்டர், பெருநிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்பட்டு பிரபல பிராண்ட் பெயரில் ரூ.1,500 வரை விற்கப்படுகிறது. அதே நேரம் ஜன் ஒளஷதி மருந்தகத்தில் சர்க்கரை நோய் அளவறியும் டிஜிட்டல் மீட்டர் விலை சுமார் ரூ.480தான். இதே போல உடல் வலி முதல் புற்றுநோய் வரையிலான உபாதைகளுக்கான மருந்துகள், பிராண்டட் ரகங்களில் 2 முதல் 15 மடங்குவரை அதிக விலையில் விற்பனையாகின்றன.

விழிப்புணர்வு இல்லாமை ஜெனரிக் மருந்துகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. படிக்காதவர்கள் மட்டுமன்றி படித்தவர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. மருத்துவர்கள் பெரும்பாலும் பரிந்துரைப்பது பிராண்டட் (வர்த்தக பெயர் கொண்டவை) மருந்துகளையே. பிரத்யேகமான விற்பனைப் பெயரில்லாத, மூலக்கூறின் பெயரை மட்டுமே கொண்ட ஜெனரிக் மருந்துகளின் விலை மிகக் குறைவாக இருந்தபோதும், விலை அதிகம் கொண்ட, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பிராண்டட் மருந்துகளையே மக்கள் கடைகளில் கேட்டு வாங்கிச் செல்கின்றனர். மருத்துவர் பரிந்துரைத்த பிராண்டட் மருந்தும், மருந்துக்கடைக்காரர் கூறிய ஜெனரிக் வகை மருந்தும் ஒரே மூலக்கூறுகளை கொண்டதுதான் என்கின்ற தெளிவும், விழிப்புணர்வும் மக்களிடம் இல்லாதது, பிராண்டட் மருந்து நிறுவனங்களுக்கு கொண்டாட்டமாகிறது. அனைத்து மருந்துகளும் ஜெனரிக் மருந்துகளாகுமா?

No comments:

Post a Comment