கற்றதும் பெற்றதும்-1
*மணி
இன்றைய தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியில் மனிதனை உயிரோட்டமாக வைத்திருப்பது புத்தக வாசிப்பே. தொழில்நுட்ப மின்னூலில் காட்சிப்படுத்த முடியாத கற்பனைகளை வாரித்தரும் அன்னையாக விளங்குபவை புத்தகங்களே.அவ்வகையில் சம்பாதித்த பணத்தை சிறிது தானம் செய்வது போலத்தான் ஒரு சிறுபிள்ளை முயற்சியாக மறுவாசிப்பு செய்த புத்தகங்களையும் படித்து ரசித்த பதிவுகளையும் பதிவிடுவது எனும் முடிவு. இப்படி எழுத தூண்டிய நண்பர்களுக்கும்,கற்றதும் பெற்றதும் வாட்ஸப் குழுவில் அனைவருக்கும் காணிக்கையாக்குகிறேன். இதில் குறையோ பிழையோ இருந்தா கோபிச்சுக்காதீங்க.அப்படியே கோபிச்சாலும் வெளிய காட்டிக்காதீங்க.
நூல்:சிறிது வெளிச்சம்
விகடன்
கிழமைகளிலே அவள் வியாழக்கிழமை என்பேன்.அன்று தான் விகடன் வரும் என்பது ஆழ்மனசில் அடித்த ஆணி போல் மனதில் பதிந்தது.2009 ல் பி.எட் பயிலும்போது ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோதே இத்தொடரை வாரந்தோறும் படித்துவிடுவேன்.
ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டு அதனை சற்று இயல்பாய் விளக்கி, அதற்கு இணையாக ஒரு குறும்படத்தையோ அல்லது மேலை நாட்டு ஆங்கிலப்படத்தையோ ஒற்றி எடுத்ததுபோல் கூறி முடிவில் சொல்ல வந்த கருத்தை வாசிப்பு உலகத்தில் மேயவிட்டு தருவது எஸ்.ரா வின் ஸ்டைல். பெட்டிச்செய்தியில் ஒரு ஆளுமையின் தகவலுடன். கருத்துச்செறிவுடன் ஒவ்வொரு படைப்பும் புதிய புதிய சிந்தனைகளையும் எண்ணங்களையும் தாங்கி வரும்.
அவ்வப்போது கட்டுரைகளில் வரும் வாழ்வியல் வரிகள் எப்போதும் இனிக்கும் தேனாகும்.உ.ம்
#வீட்டுச்சண்டை
அன்றாடம் ஒவ்வொரு வீட்டில் நடக்கும் பிரச்சனைதான்.
இந்தச்சண்டையில் யார் எதிரி,யார் பெரியவர் என அறிந்துகொள்ளவே முடியாது.நானே வீட்ல சண்டைபோட்டுட்டு வந்திருக்கேன் நீ ஏன் உயிரை வாங்குற என்ச் மற்றவர் மீது எரிந்து விழுவாங்க.
இதுபற்றி பிரேம்சந்த் எழுதிய உறவு எனும் கதை எழுதியிருப்பதாக எஸ்.ரா கூறுகிறார்.
"கிராமத்தில் பெற்றோரைவிட்டு நகரத்தில் இருக்கும் மகன் ஒரு நாள் கிராமத்துக்கு வருகிறான். அம்மா கோபித்துக்கொள்கிறார்.
ஒரே கோபம்.இவனுக்கு புரியவில்லை.அப்பா விளக்குகிறார்.உன் மேல் உள்ள பாசம்தான் சண்டைபோட வைக்குது.அப்பா காரணத்தை கூறி அவனை வழியனுப்பி வைக்கிறார்.அவனும் அதை உணர்ந்து அடிக்கடி வருவதாய் கூறி செல்கிறார்.
"கோபத்தில் இருந்து உருவானதை விட சிரிப்பில் இருந்தே அதிக சண்டை உருவாகின்றன.இதை தவறாய் புரிந்துகொள்வோர் அதிகம்.குறிப்பாக ஸ்மைலிகள் இன்றைய நாளில்..
ஒரு உரையாடலில் சிரிப்பதாய் நண்பருக்கு ஸ்மைலி அனுப்பினேன்.அதை தவறாய் புரிந்துகொண்டு இருநாள் பேசாமல் இருந்தார்.பின்பு விளக்கியபின்பே சமாதானம் அடைந்தார்.ஒருவரை ஆன்லைனில் சமாதானத்தபடுத்துவது அவ்வளவு இயல்பான காரியமல்ல என புரிந்துகொள்ள முடிந்தது.
#தத்துவார்த்த வரிகள்
*நோயைவிட கொடியது தனிமை
*சொற்கள் விதையாக்குவதும் வீணாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது
*கஷ்டத்தைவிடவும் அதை மூடி மறைப்பதுதான் பெருந்துயரம்
*நோயும் மரணமும் பெண்களை நெருங்கி வரும்போது அதை தடுக்க எவருக்கும் விருப்பம் இருப்பதில்லை
*கடவுளின் மெளனத்தைவிட மனிதர்களின் மெளனம் கொடுமையானது
#இவரால் அறிமுகம் ஆன what is it எனும் குறும்படம்.அப்போது மிகுந்த அதிர்வலை ஏற்படுத்தி அதனை மேடைப் பேச்சாளர்களே இல்லை எனலாம்.
எஸ்.ரா வின் அனுபவ மொழிகளும் சம்பவங்களும் ஒவ்வொரு கட்டுரையும் இன்னும் உயிர்ப்பிக்கும்.உலகில் அதிகம் புரிந்துகொள்ளாதது எது எனும் கேள்விக்கு..
"உலகில் அதிகம் புரிந்து கொள்ளப்படாதது திரும்ணமாகி 10 வருடங்கழித்து பெண்ணுக்குள் உருவாகும் தனிமையும் வெறுமையுமே ஆகும். என்பார்.எவ்வளவு உண்மை மொழிகள் என கட்டுரையின் இறுதியில் தெரியும்.
இதுபோல் எண்ணற்ற சுவாரஸ்ய தகவல்கள் இதில் உள்ளன.பல நண்பர்களுக்கு பரிந்துரைத்து, அவர்கள் இதனை கொண்டாடியுள்ளனர். ஒருவர் மட்டும் முதலில் ஒன்றும் கூறாமல் பின்பு என் தொல்லை தாங்காமல் ஒரு மூன்று பக்கத்திற்கு இப்புத்தகம் பற்றி கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.
.ஆரம்பநிலையில் ஒருவர் வாசிப்பின் சுவை அறிய வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
-தொடரும்
நன்றியுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment