இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, July 03, 2018

டி.எல்.எட்., தேர்வு தேர்ச்சி: ஆசிரியைகளுக்கு சிக்கல்


தேசிய அளவில் தனியார் பள்ளிகளில் பி.எட்., தகுதி இல்லாத ஆசிரியர் மத்திய அரசின் தேசிய திறந்த வெளி கல்வி நிறுவனத்தின் (தி நேஷனல் ஓபன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூலிங் - என்.ஐ.ஓ.எஸ்.,) டி.எல்.எட்., (ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு) கல்வி தகுதி பெற வேண்டும், என மத்திய அரசு உத்தரவிட்டது.

டி.எல்.எட்., தகுதியை 2019க்குள் பெற வேண்டும் என்ற நிபந்தனையால் உடல் ரீதியான மற்றும் மகப்பேறு காலங்கள் போன்ற காரணங்களால் ஆசிரியைகள் பலர் இத்தகுதி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 1 - 8 ம் வகுப்பு கற்பிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் தங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து என்.ஐ.ஓ.எஸ்., மூலம் விண்ணப்பித்து முதலாம் ஆண்டு தேர்வு எழுதினர்.தற்போது இரண்டாம் ஆண்டு பாடத்திட்டங்கள் சனி, ஞாயிறு அன்று ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட பயிற்சி மையங்களில் நடத்தப்படுகிறது.

ஓராண்டு நிறைவு செய்த நிலையில் ஆசிரியைகள் பலர் மகப்பேறு காலத்தை சந்திக்க நேர்ந்ததால் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டி.எல்.எட்., தகுதி இல்லாமல் பள்ளியில் பணியை தொடர முடியுமா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு இத்தேர்வை முதன் முறையாக கொண்டு வந்துள்ளது. தற்போது வரை முதலாம் ஆண்டு வரையான வழிகாட்டுதல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மகப்பேறு காலம் மற்றும் வேறு பள்ளிக்கு மாறிச் செல்லுதல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் தடை படும் படிப்பை எவ்வாறு முடிக்க வேண்டும் என்ற வழிமுறை குறித்து தெளிவுபடுத்தவில்லை. இச்சர்ச்சைக்கு பின் ஏதாவது வழிகாட்டுதலை மனித வள மேம்பாட்டு துறை வெளியிட வாய்ப்புள்ளது, என்றார்.

No comments:

Post a Comment