கற்றதும் பெற்றதும் -2
*மணி
ஒரு சிறுகதை இப்படி ஆரம்பிக்கும்..
"Life is like a snooker game.you hit one ball. It hits another.that hits another and that hits another.Ultimately some other ball gets into pocket.
எவ்வளவு நுட்பம் பாருங்கள். வாழ்வும்
கே யாஸ் தியரி போல எப்படியோ ஆரம்பித்து ஒரு காரண காரிய தொடர்புடன் முடிந்துவிடும்.நினைத்துப்பார்த்தால் ஒரு வலைப்பின்னல் போல்.சிறுகதையும் இப்படித்தான்.ஒரு கதை என்பது மூனு சீட்டு விளையாடுவது போல கண்கட்டி வித்தைதான் என்பார் சுஜாதா.
பாவண்ணன்
ஒரு புத்தகத்தை பற்றி பேசுவது என்பது எப்போதும் ஒரு நல்ல வாசகனுக்கு உற்சாக மூட்டும்.அதை பேசும் ஒவ்வொரு கட்டத்திலும் அவன் காலத்தை கடந்து சென்று அதை படித்த காலத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து திரும்பும் அனுபவம் அவனுக்கு கிடைக்கிறது.
கதையின் மூலம் அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்களுடன் பொருத்துப் பார்க்கிறான்.
எழுத்தாளர் பாவண்ணனின் வரிகள் இதுபோல் எளிமையானது. நுட்பமானது. ஒவ்வொரு வரிகளையும் அலசுவார்."ஒரு மனிதனின் முதல் 23 வயது முக்கியம்.எல்லாவற்றை பற்றியும் சொந்தமாய் ஒரு பார்வையை உருவாக்கிகொள்ளும் காலம்.பின் எஞ்சிய காலத்தை இந்த அனுபவ ஒளியே கலங்கரை விளக்காய் மாற்றும்.
இப்படிப்பட்ட அனுபவத்தை நல்ல நண்பர்களும் புத்தகங்களுமே எனக்குத் தந்தது.
ஒருநாள் எதெச்சையாய் நூலகத்திலிருந்து எடுத்து வாசித்ததுதான் பாவண்ணனின் ஆழத்தை அறியும் பயணம்" புத்தகம்.காலச்சுவடு பதிப்பகம்
மற்றவர்களின் சிறுகதைகளை தன்னுடைய பாணியில் விளக்கி,
அக்கதைகளின் பின்புலத்தை மிகத்தெளிவாய் வரைவார்.எழுத்தாளர்களே அப்பிடியா சொன்னேன் எனக் கேட்கும் அளவிற்கு அதில் உள்ள உண்மையை உச்சத்தை தொட வைப்பார்.
அவரின் சிறுகதைகள் இன்னும் அபாரமாய் இருக்கும்.இருப்பினும் மற்றவர்களின் சிறுகதைகளை ஆய்வு நோக்கில் எழுதியிருப்பார்.
# "மாடும் மனிதனும் "
விந்தன் எழுதிய கதை.
கதையின் ஆரம்பத்தில் தன் அனுபவத்தை சொல்லி.கதையை கூறுவதால் நிகழ்காலத்தையும்.
அக்கதையையும் ஒப்பிட்டு அறியலாம்."எழுத்தாளர் நாள்தோறும் பெங்களூருவில் கணினி மையத்துக்கு செல்வார். அது அவர் வழக்கமாய்ச் செல்லும் .நண்பரின் கடை.அங்கே தலைமை பொறுப்பில் ஒரு பெண்மணி இருப்பார் முதலாளிக்கே தெரியாத விசயம், பண பரிமாற்றம் என சகலமும் அவள்தான்..ஒரு நாள் திருமண அழைப்பிதழை நீட்டினாள்.அன்று ஊரில் இருந்ததால் நானும் திருமணத்துக்கு சென்றேன். அப்பெண்மணிக்கு ஒரே மகிழ்ச்சி.அன்று அவளின் முதலாளி நண்பர் வராதது ஆச்சர்யமாய் இருந்தது. இருப்பினும் அப்பெண் அதனை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
மேலும் அப்பெண்மணி மணமேடையிலேயே தான் இனி அலுவலகத்துக்கு வர இயலாது. முதலாளிதான் பாவம் என வருத்தப்பட்டு கொண்டிருந்தாள். நானும் வருத்தத்துடன் சரி என சொல்லிவிட்டு அடுத்த வாரம் மையத்துக்கு போனேன். வேறு ஒரு பெண்மணி இருந்தார்.எனக்கு ஆச்சர்யம்.
ஏன் திருமணத்திற்கு வரவில்லை என முதலாளியிடம் கேட்டபோது கணினி பழுதானதால் வரமுடியல.எனக்கு இதுதான் முக்கியம்.என்றார். எனக்கு திகைப்பாய் இருந்தது.இவ்வளவுதானா ஒரு மனிதனின் உழைப்புக்கு கிடைக்கும் மரியாதை எனத் தோன்றியது.
நாமும் நம்மால் தான் இந்த நிறுவனம் இயங்குதுனு நினைச்சிருப்போம்.ஆனா நாம ஒரு 751வது எலும்பிச்சம் பழ ஸ்பேர் பார்ட்ஸ் என்பது நம்மிள் எத்தினி பேருக்குத் தெரியும்.
"மாடும் மனிதனும்" இக்கதையில் பண்ணைவீட்டில் பல ஆண்டாய் உழைத்துவரும் வேலைக்கார செவலை மாட்டை பராமரித்து வருவான்.ஒருநாள் மாடும் செவலையும் நோயில் விழுந்திடுவார்கள்.இறுதியில் இருவரும் இறந்துவிடுவர். முதலாளி மாடு இறந்ததற்காகதான் அதிகம் வருத்தப்படுவார்.ஏன்? ஏனா மாடு காசாச்சே என்பார்.மனித உழைப்பு எளிமையா கிடைக்கும். மாடு கிடைக்குமா? என்பார்.
அப்படியே அந்த கணிப்பொறி வேலை பார்க்கும் பெண்மணியும் இந்த பண்ணையாளும் ஒருகணம் கண்ணில் வருவார்கள்.
"இத்தொகுப்பில் உள்ள எல்லா கதைகளும் வாழ்வியல் எதார்த்தத்தை பிரதிபலிக்கும். கரிச்சான் குஞ்சு சீட்டாட்டத்தில் பாசிடிவாய் எழுதிய நூறுகள் கதை, இந்திரா பார்த்தசாரதியின் நாசகாரக்கும்பல், பிரபஞ்சன்-பிரும்மம்,கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு, இந்துமதியின் துணி.
#ஒரு கூடைக்கொழுந்து
ராமையா எழுதிய தேயிலை தோட்ட கதையில் தேயிலை கூடுதலாய் பறித்த லட்சுமி எனும் பெண்ணை கங்கானி உதாசினம் செய்ய அடுத்த நாள் நடக்கும் போட்டியில் மீண்டும் ஆணை விட அதிக தேயிலை பறித்து ஜெயிக்கிறாள்
இப்போதும் ஒரு பெண் வாகனத்தில் ஒரு ஆணை முந்திசென்றாலோ, கார் ஓட்டி நடுவழியில் நின்றாலோ ஏளன சிரிப்போடு வெறுப்புடன் பார்ப்பதை இக்கதை காட்டுகிறது.பெண்ணின் வலிமையை இக்கதையில் காணலாம்.
இதே தொகுப்பில் எனக்கு பிடித்த கதை உண்டு.ஒரு பாம்பை அடிக்க ஐந்துபேர் போவார்கள். இரை விழுங்கிய பாம்பு நகரமுடியாமல் கிடக்கும்.இறுதியில் யாரும் பாம்பை அடிக்காமல்
ஐந்து பேரும் வெவ்வேறு காரணம் சொல்லி பயந்துகொண்டு சென்றுவிடுவார்கள்.இது ஒரு படிமம்.நேர்மையும் நேர்மையின்மையும் சந்திக்கும்போது நேர்மையை சந்திக்க அச்சப்பட்ட மனிதன் நழுவுவது போல குறியீடு வைத்திருப்பார்.
பாவண்ணனின் கட்டுரைகள் மிகவும் நுட்பமானதும் அழகியலானதும் ஆகும்.
இதுபோல் ஒட்டகம் கேட்ட இசை முதலிய பல கட்டுரைகளும் வந்துள்ளது.
வாசியுங்கள்
-தொடரும்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment