Covai women ICT
*03.07.2018*
*பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:*
*திருக்குறள் :*
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
விளக்கம் :
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே நாட்டின் அரண் (பாதுகாப்பு)ஆகும்.
*பழமொழி :*
Behind an ableman there are always other able man.
ஒரு வித்தகனுக்குப் பின்னால் ஓராயிரம் வித்தகர்கள்.
*பொன்மொழி:*
,ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்கு செல்வத்தை சேர்த்து வைப்பதைவிட, உழைக்கும் பழக்கத்தை கற்றுகொடுப்பது அவர்களுக்கு வெற்றியைத் தரும்.
1- ரிச்சர்ட் வாட்லி
*இரண்டொழுக்க பண்பாடு :*
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
*பொது அறிவு :*
1. மரகதத்தீவு என அழைக்கப்படுவது எது ?
அயர்லாந்து
2. அண்டார்டிகாவில் இந்தியா அமைத்த 3 ஆவது ஆராய்ச்சி நிலையத்தின் பெயர் என்ன ?
பாரதி ஆராய்ச்சி நிலையம்
*நீதிக்கதை :*
எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.
அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.
ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.
நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.
அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.
மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.
பிரான்ஸ் மன்னர் மாவீரன் நெப்போலியன் புரட்படையினரால் கைது செய்யபட்டு செயின்ட் ஹெலினா தீவில் தனிமையில் அடைக்கபட்டார் அவரை பார்க்க வந்த அவரது நண்பர் ஒரு சதுரங்க போர்டும் காயின்களும் கொடுத்துவிட்டு போனார் தனிமையில் சதுரங்கத்தில் விளையாடியே நாட்களை கழித்து இறந்தும் போனார் சிறிது காலத்திற்கு முன் அவர் விளையாண்ட சதுரங்க அட்டையை பிரான்ஸ் அரசு ஏலம் விட்டது அதை வாங்கிய நபர் அதை பிரித்து பார்த்த போது ஹெலீனா தீவிலிருந்து தப்பிப்பதற்கான வரைபடம் இருந்தது எப்பேற்பட்ட திறமையான மாவீரன் ஆனால் இனிமேல் தப்பிக்க முடியாது என்ற எண்ணமே நெப்போலியனை அடுத்த கட்ட நகர்விற்கு செல்ல முடியாமல் தடுத்து விட்டது...
சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி 💐
*இன்றைய செய்தி துளிகள் : 03.07.2018*
1. தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை உத்தரவிட்டுள்ளது.
2.மதுரையில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2 ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருந்தார். இந்த தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசு அலுவலகங்கள், கடைகள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுக்கள், கப்கள், பிளாஸ்டிக் ஸ்டிரா போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக வாழை, தென்னை மட்டைகள், பாக்கு மற்றும் மூங்கில் பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3.
சேலம் பகுதிகளில் பெய்த மழையை அடுத்து 60 அணியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்
4.: ''அஞ்சல் காப்பீடு திட்டத்தில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது,'' என, தமிழக அஞ்சல் வட்ட முதன்மைத் தலைவர், சம்பத் கூறியுள்ளார்.
5. சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை வென்றது.
6. உலக்கோப்பை கால்பந்து போட்டி : காலிறுதிக்குள் நுழைந்தது பிரேசில் அணி
No comments:
Post a Comment