இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 18, 2018

எந்த புத்தகம் எந்த நூலகத்தில்?'மொபைல் ஆப்'பில் அறியலாம்


எந்த புத்தகம், எந்த நுாலகத்தில் உள்ளது என்ற விபரங்களை, இனி, 'மொபைல் ஆப்' வழியே தெரிந்து கொள்ளலாம்.அனைத்து பொது நுாலகங்களிலும், டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகளை, பொது நுாலகத்துறையின் இயக்குனர், ராமேஸ்வர முருகன் மேற்பார்வையில், இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, அனைத்து நுாலகங்களின் விபரங்களும், மின்னணு பதிவு தொகுப்பாக மாற்றப்படுகிறது. மாவட்ட மைய நுாலகங்களில், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்க உள்ளதால், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வாங்கும் பணிகள், மேற்கொள்ளப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள, தேவநேய பாவாணர் நுாலகம் மற்றும் அண்ணா நுாற்றாண்டு நுாலகம் முதல், கிளை நுாலகங்கள் வரையிலும், நுாலகங்களின் பணிகளை நவீனப்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.

நுாலகங்களை இணைக்கும், 'மொபைல் ஆப்' தயார் செய்யப்படுகிறது. புத்தக வாசிப்பாளர்கள், ஏதாவது முக்கியமான புத்தகங்களை படிக்க வேண்டும் என்றால், அந்த புத்தகம் எந்த நுாலகத்தில் உள்ளது என்பதை, மொபைல் ஆப் வழியாக தெரிந்து கொள்ளலாம்.அனைத்து நுாலகங்களிலும் உள்ள புத்தகங்களின் தலைப்புகள், எழுதியவர், பதிப்பு, பதிப்பாளர் போன்ற விபரங்கள், இந்த, 'ஆப்'பில் இடம் பெறும். இதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இந்த பணிகளை, எம்.எஸ்.சுவாமிநாதன், ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, பொது நுாலகத்துறை மேற்கொண்டுள்ளது

No comments:

Post a Comment