இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 01, 2017

மக்கள்தொகைக் கல்வித் திட்டம்: 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை போஸ்டர் வடிவமைப்பு போட்டி


மக்கள் தொகைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போஸ்டர் வடிவமைப்பு தயாரித்தல் போட்டி திங்கள்கிழமை (செப்.4) நடைபெறவுள்ளது. இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொறி விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதுதில்லியில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் (அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் நீங்கலாக) 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு போஸ்டர் தயாரித்தல் போட்டியினை மக்கள் தொகைக் கல்வித் திட்டத்தின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை சிறப்பாக நடத்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். போட்டிக்கான தலைப்புகள்: பள்ளி அளவில் இந்தப் போட்டி திங்கள்கிழமை (செப்.4) நடத்தப்பட வேண்டும்; 'உலக வெப்பமயமாதல்', 'என் பூமித்தாயை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்',' திட்டமிட்ட நகர மயமாதலின் அவசியம்', 'வாழ்க்கை விலை மதிப்பில்லாதது அதனைப் போற்று', 'முறையான சரிவிகித உணவூட்டம்: ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இன்றியமையாதது', 'இளம் வயது திருமணம் இயல்பான வளர்ச்சிக்குத் தடை' போன்ற பல்வேறு தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களுக்குத் தேவையான சார்ட் தாள், கலர் பென்சில்கள், கிரையான்கள் போன்றவற்றை தாங்களே கொண்டு வருதல் வேண்டும். பள்ளிகளில் போஸ்டரை தயாரிக்க மாணவர்களுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் வழங்கப்படும்.

பரிசு எவ்வளவு? மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.700, ரூ.500, ரூ.300 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவை தேசிய அளவில் தெரிவு செய்யப்படுவதற்காக புதுதில்லியில் உள்ள என்சிஇஆர்டி-க்கு அனுப்பி வைக்கப்படும். தேசிய அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.1,000, ரூ.700, ரூ.500 வழங்கப்படும். என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment