பலருக்கும் புது புது இடங்களுக்குப் பயணம் செய்வது, அங்குள்ள இயற்கை சூழலை ரசிப்பது போன்ற ஆசைகள் இருக்கும், ஆனால் பேருந்தில் பயணித்தாலே மயக்கம், வாந்தி வருவது போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு அது என்றுமே கனவாகவே இருந்துவிடுகிறது. அதிலும், மலை பிரதேசத்திற்கு பஸ்ஸில் பயணிப்பது என்பது கெட்ட கனவு.
எமிட்டோஃபோபியா என்பது வாந்தி எடுப்பதன் மீதுள்ள அதீதமான பயத்திற்கு பெயர். ஃபோபியா இல்லாவிட்டாலும், இப்படி பேருந்தில் பயணிக்கும்போது வரும் வாந்தியில் இருந்து தப்பிக்க ஒரு எளியத் தீர்வை இங்கு நான் சொல்ல போகிறேன். இதை வெறும் வயிற்றில் செய்யக்கூடாது, பயணிப்பதற்கு முன்பும், பின்பும் எதையாவது நிச்சயம் சாப்பிட வேண்டும்.
ஒரு எலுமிச்சை பழச்சாற்றில் சிறிது உப்பும், கொஞ்சம் அதிகமாகவே மிளகு தூளும் சேர்த்துக் குடிக்கவும். பின்னர் பயணத்தின் போது புதினா இலைகளைச் சாப்பிடுவது வாந்தி வருவது போல் இருக்கும் பிரமையில் இருந்து விடுதலை அளிக்கும். இதைப் பின்பற்றினால் எந்தப் பயமும் இல்லாமல் நீங்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பேருந்தில் பயணிக்கலாம்.
No comments:
Post a Comment