போஸ்ட் பேசிக் நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது. தமிழக அரசின் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை, ‘நீட்’ அடிப்படையில் நிறைவு பெற்று, முதலாமாண்டு வகுப்புகள் கடந்த வாரம் தொடங்கின. இதற்கிடையே சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவமுறை படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் கடந்த வாரம் நிறைவு பெற்றது.
பிஎஸ்சி நர்சிங் விண்ணப்ப விநியோகமும் முடிந்த நிலையில் இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு முறையில் விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில் போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், லேட்டரல் என்ட்ரி மற்றும் டிப்ளமோ இன் பார்மசி ஆகிய படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் பெற முடியும். மருத்துவக் கல்வித்துறை இணையதளங்களான www.tnhealth.org அல்லது www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் விபரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 22ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு மருத்துவக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment