இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, September 30, 2017

நுகரும் திறனை இழப்பது மறதி நோய்க்கான அறிகுறி: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்


நுகரும் திறனை இழப்பது 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த நீண்டகால ஆய்வில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டனர்.

புதினா, மீன், ஆரஞ்சு, ரோஜா, பதனிடப்பட்ட தோல் ஆகியவற்றின் மணங்களை உணர முடியாதவர்களுக்கு, அவற்றின் மணங்களை உணர முடிந்தவர்களைவிட, அடுத்த ஐந்து ஆண்டுகளில் டிமென்ஷியா நோய் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று அந்த ஆய்வின் இறுதியில் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மணங்களை நுகரும் உணர்வை இழப்பது என்பது எங்கோ தவறு நிகழ்கிறது என்பதற்கான வலிமையான அறிகுறி என்று அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயந்த் பின்ட்டூ கூறினார். பிரிட்டனில் உள்ள அல்சைமர் சொசைட்டியின் தலைவர் மருத்துவர் ஜேம்ஸ் பிக்கெட், ஆரம்பகட்டத்தில் டிமென்ஷியா மனிதர்களின் நுகரும் திறனை பாதிக்கிறது என்பதற்கு இந்த ஆய்வு கூடுதல் ஆதாரமாக இருந்தாலும், இந்த ஆய்வுகள் இன்னும் துல்லியமானவையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் ஜீரியாட்ரிக்ஸ் சொசைட்டி என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment