பள்ளிக்கூடப் பராமரிப்புக்கு சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைப்பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இந்தப் பிரச்னையை திமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு (திமுக) எழுப்பினார்.
அவர் பேசுகையில், அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலும், சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம் பள்ளிக் கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையிலும், சீரமைக்க போதிய அக்கறை செலுத்தப்படாமலும் இருப்பதே ஆகும். மாநகராட்சியில் இருந்து இதுபோன்ற விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அரசின் கவனத்துக்கு வரத் தாமதம் ஆகிறது. இதுபோன்ற பள்ளிக் கூடங்களைப் பழுது பார்க்க எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:
அரசுப் பள்ளிகளில் வரும் ஆண்டுகளில் சேர்க்கை அளவு அதிகரிக்கும். அதில் இந்தியாவிலேயே சிறந்த நிலையை எட்டும். பள்ளி பழுதுபார்ப்புப் பணிகளுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்துவது குறித்து முதல்வரின் ஆலோசனையைப் பெற்று முடிவு அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment