இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 05, 2017

முதுநிலை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு 1000 ஆசிரியர் பணிக்கான அறிவிப்பு ரத்து


சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த பி.செல்லமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் சுமார் 1000 விரிவுரையாளர் பதவிக்கான தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் 16ம் தேதி அறிவிப்பாணையை வெளியிட்டது. அதில், விரிவுரையாளர் பதவிக்கு பொறியியல் பட்டதாரிகள் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்றும் பொறியியல் முதுநிலைபடித்தவர்கள் இந்த பதவிக்கு போட்டியிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் விதிகளின்படி விரிவுரையாளர் பதவிக்கு பொறியியல் பட்டப் படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் அதேபோல், பொறியியல் முதுநிலைப் படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடைமுறையை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றாமல் பொறியியல் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்களை விரிவுரையாளர் பதவிக்கான தேர்விலிருந்து நீக்கம் செய்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த நடைமுறை அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கவுன்சிலின் விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது.

தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் பொறியியல் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை. எனவே, பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பதவிக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். புதிய அறிவிப்பாணையை வெளியிடுமாறு தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிய அறிவிப்பாணையை 2 வாரங்களுக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment