ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணம், 12ம் தேதி முதல், இரு மடங்காக உயருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றபின், ரயில்வே துறையில், வருவாயை பெருக்கும் முயற்சியில், ரயில்வே அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை, ரத்து செய்வதற்கான காலக்கெடு மற்றும் கட்டணத்தை மாற்றி அமைக்க, ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு முடிவு செய்தார்.
இதன்படி, புதிய விதிமுறைகளை, ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.
* ரயில் புறப்படுவதற்கு, 48 மணி நேரத்துக்கு முன், டிக்கெட்டை ரத்து செய்தால், ஒவ்வொரு பயணிக்கும், குறைந்தபட்சம், 60 ரூபாய் முதல் அதிகபட்சம், 240 ரூபாய் வரை டிக்கெட்டின் கட்டண தொகைக்கு ஏற்ப பிடித்தம் செய்யப்படும்
* ரயில் புறப்படுவதற்கு முன், 48 முதல் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், கட்டண தொகையில், 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்
* ரயில் புறப்படுவதற்கு முன், 12 முதல் 4 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், 50 சதவீத கட்டணம் திரும்பப் பெறலாம்
* ரயில் புறப்படுவதற்கு முன், நான்கு மணி நேரத்திற்குள் ரத்து செய்யும்போது, கட்டணத் தொகை திரும்ப கிடைக்காது
* ஆர்.ஏ.சி., மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படும ்போது, அதற்காக வசூலிக்கப்படும் கட்டணம், ௩௦ ரூபாய், இனி, இரு மடங்காக பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்பட்ட பின், 30 நிமிடம் வரை டிக்கெட்டை ரத்து செய்யலாம். இதற்கு முன், இரண்டு மணி நேரமாக இருந்தது.இந்த விதிமுறைகள், 12ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment