TNPTF MANI
பிஎப் வட்டி விகிதம் 24-ம் தேதி நிர்ணயம்?
நடப்பு நிதி ஆண்டில் செய்யப்படும் பி.எப். டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் வரும் 24-ம் தேதி நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இபிஎப்ஓ-ன் 209-வது இயக்குநர் குழு சந்திப்பு 24-ம் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய சந்திப்பில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரு நிதி ஆண்டு களுக்கான (2013-14 மற்றும் 2014-15) வட்டி விகிதம் 8.75 சதவீதமாக இருக்கிறது. ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. அதனால் பி.எப். மீதான வட்டியும் குறைக்கப் படும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் நிலவுகிறது.
கடந்த முறை ரிசர்வ் வங்கி 0.50 சதவீதம் வட்டி குறைப்பு செய்தவுடன், சிறிய சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் பிஎப் டெபாசிட் களுக்கான வட்டியை தொழிலாளர் துறை அமைச்சர் தலைமையிலான குழு தன்னிச்சையாக முடிவு செய்யும். இக்குழுவின் முடிவு நிதி அமைச்சகத்தின் ஒப்பு தலுக்குப் பின் அரசாணையாக வெளியாகும்.
No comments:
Post a Comment