'பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, கண்டிப்பாக உண்டு' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்படுவது போல், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கு, 25 மதிப்பெண்கள் தனியாக வழங்கப்படுகின்றன. இத்தேர்வுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தலா, நான்கு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படும். பின், அவற்றில், தலா ஒரு பயிற்சி, செய்முறைத் தேர்வில் வினாவாக வரும். இதற்காக, செய்முறைத் தேர்வு பயிற்சி புத்தகம், கல்வித் துறையிலிருந்து வழங்கப்படும். இந்த ஆண்டு, பயிற்சிப் புத்தகம் வழங்கப்படாததால், செய்முறைத் தேர்வு உண்டா என, மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை கண்ணப்பன் கூறியதாவது:செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி வினாக்கள், அறிவியல் பாடப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன; இந்த ஆண்டு தனியாக புத்தகம் வழங்கப்படாது. அதிலுள்ள, 15 செய்முறைப் பயிற்சிகள் குறித்து, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத் தேர்வுக்கு கட்டாயம் செய்முறைத் தேர்வு உண்டு; எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment