திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், 18 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளம் தேங்கிய சில இடங்களுக்கு மட்டும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், நவ., 9 முதல் மழை விடுமுறை துவங்கியது.
தீபாவளிக்கு மறுநாள், 11ம் தேதி, சில பள்ளி, கல்லுாரிகள் திறந்தாலும், மழை தொடர்ந்ததால் அரை நாள் மட்டுமே இயங்கின. தொடர்ந்து விடுமுறைமழையின் சீற்றம் அதிகரித்ததால், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இரு நாட்களாக வெயில் தலை காட்டியதால், பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. கடந்த, 12 வேலை நாட்களில் வகுப்புகள் இயங்காமல் பாதிக்கப்பட்டதால், இன்று முதல், நேரத்தை வீணடிக்காமல் வகுப்புகளை நடத்துமாறும், மாணவர்களை முடிந்த வரை விடுமுறையின்றி வகுப்புகளில் பங்கேற்க வைக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, நவ., 17ல் துவங்க இருந்த திருப்புதல் தேர்வுகளை, பள்ளிகளே முடிவு செய்து, திங்கள் கிழமை முதல் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வாய்மொழி உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது; மழையால் பாதித்துள்ள மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகளை இழந்திருந்தால் அவர்களுக்கு, இன்று முதல் மீண்டும் இலவச புத்தகம், சீருடை வழங்கப்படு கிறது. இதற்காக, அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று இலவச புத்தகங்கள் அனுப்பப்பட்டன.சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில், வெள்ள பாதிப்புள்ள, 11 அரசு பள்ளிகளுக்கு மட்டும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. சீருடைகெடுபிடி இல்லை வெள்ள பாதிப்பு காரணமாக வீடுகளை இழந்தும், பாதுகாப்பான இடங்களில் வசிக்கும் குடும்பத்தினரின் பிள்ளைகள், சீருடைகளை இழந்திருந்தால், அவர்களை சீருடை அணிந்து வர, சில வாரங்களுக்கு கட்டாயப்படுத்த வேண்டாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment