'தமிழகம் தவிர்த்து, பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த உள்ளன,'' என, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
அமல்படுத்தப்படவில்லை நாட்டின் மக்கள் தொகையில், ஏழைகள் என கண்டறியப்பட்டுள்ள, மூன்றில் ஒரு பங்கினருக்கு, மாதம்,5 கிலோ அரிசி, ஒன்று முதல், மூன்றுரூபாய் விலையில் வழங்கப்படவேண்டும் என்பது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய அம்சம். வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக, இந்த திட்டம் கருதப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டம், முந்தைய காங்., அரசால், பார்லிமென்டில், 2013ல் நிறைவேற்றப்பட்டது. ஓராண்டிற்குள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இச்சட்டத்தை பின்பற்ற வலியுறுத்தப்பட்டன. எனினும், மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்ட பின்னும், நாடு முழுதும், இன்னமும் உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், டில்லி யில் நேற்று, அனைத்து மாநில உணவுத் துறை செயலர்கள் மாநாட்டை கூட்டி, உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அமைச்சர் பஸ்வான் விவாதித்தார். இதன்பின், நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
உணவு பாதுகாப்பு சட்டத்தை, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அமல்படுத்த, தமிழகம் தவிர்த்து, அனைத்து மாநிலங்களும் உறுதியளித்து உள்ளன. மொத்தமுள்ள, 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களில், இந்த சட்டத்தை இதுவரை அமல்படுத்தாத, 14 மாநிலங்களில், ஆந்திராவும், சிக்கிமும், இந்த ஆண்டிற்குள் அமல்படுத்த உறுதியளித்து உள்ளன. மார்ச் மாதத்திற்குள்...உத்தர பிரதேசம், மேகாலயா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களும், அந்தமான், நிகோபார் யூனியன் பிரதேசமும், அடுத்த ஆண்டு ஜனவரியில் அமல்படுத்த உள்ளன. குஜராத், கேரளா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மாநிலங்கள், மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்த உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதமிழக அதிகாரிகள், 'தமிழகத்தில், அனைவருக்கும் குறைந்த விலையில் அரிசி வழங்கும் திட்டம், சிறப்பாகசெயல்படுத்தப்படுவதால், உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வில்லை; அடுத்த ஆண்டு ஜூலைக்குள் அமல்படுத்த உள்ளோம்' என்றனர். ரூ.4,000 கோடி மிச்சம்போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டு உள்ளதால், இரு ஆண்டுகளில், 4,000கோடி ரூபாய் மத்திய அரசுக்கு மிச்சமாகி உள்ளது. உணவு மானியத்தை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பது குறித்து, மாநில அரசுகளை, நாங்கள் வற்புறுத்த மாட்டோம்; அது, அவர்களின் விருப்பத்தை பொருத்தது. விருந்தா ஸ்வரூப்மத்திய உணவுத் துறை செயலர் Advertisement
No comments:
Post a Comment