பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் ஒரே முறையில் தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்தடுத்து தேர்வு எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுகின்றனர். இதனால் 2க்கும் மேற்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர். இந்தமுறையில் மாற்றம் செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ‘‘இனி பொதுத் தேர்வுகளை ஒன்றுக்கும் மேற்பட்ட பருவங்களில் எழுதி தேர்ச்சி பெறும்போது, ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
அதோடு, தேர்வர்கள் தங்களது இறுதி முயற்சியில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சியடைந்தால், வெவ்வேறு பருவங்களில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்களை ஒன்றாகத் தொகுத்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தேர்வு எழுதுவோருக்கு நிரந்தர பதிவெண்கள் வழங்கப்பட உள்ளது. தேர்வர் தேர்ச்சி பெறும் வரை இந்த எண்ணைப் பயன்படுத்தலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment