தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் “2ஏ”(நேர்முக தேர்வு அல்லாத பதவி) பதவியில் அடங்கிய சிவில் சப்ளை, தொழில், வணிகம், சிறைத்துறை, போக்குவரத்து துறை, பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட 32 துறைகளில் அடங்கிய உதவி அலுவலர் பதவிகளில் அடங்கிய 1,862 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வருகிற 12ம் தேதி வெளியிடப்படும். ேதர்வுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
நிரந்தரப்பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்திலிருந்து மட்டுமே விலக்களிக்கப்படும். ஏற்கனவே, அவர்கள் வகுப்பிலிருந்து வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் ேதர்வு கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணங்களை வங்கிகள், அஞ்சலகங்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். தேர்வுக்கு அறிவிப்பு வெளியான நாள் முதல்(12ம் தேதி முதல்) விண்ணப்பிக்கலாம். நவம்பர் 11ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு டிசம்பர் 27ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முக தேர்வு கிடையாது. சான்றிதழ் மட்டும் சரிபார்க்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும். சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி குரூப் 2ஏ தேர்வு குறித்த சந்தேகங்களை 044- 25332833, 044-25332833 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி 1800 425 1002ல் தொடர்பு கொண்டு தெளிவுப்படுத்தி ெகாள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இன்ஜினியர் காலிபணியிடம் 27ம் தேதி நேர்காணல் ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் அடங்கிய பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 100 பணியிடங்களுக்கு ஜூலை 27ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் சுமார் 31,653 பேர் பங்கேற்றனர். தேர்வில், விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாக 219 விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு நேர்காணல் தேர்வு வருகிற 27, 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment