அரசு பள்ளிகளில், பாட இடைவேளையில், 'கட்' அடிக்கும் மாணவர்களைக் கண்காணிக்க, பாடவாரியாக வருகை பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல பள்ளிகளில், மாணவர்கள் காலையில் வகுப்புக்கு வந்து விட்டு, இடைவேளை நேரத்திலோ, மதிய உணவு இடைவேளையிலோ வகுப்பை, 'கட்' அடித்து விட்டு சென்று விடுகின்றனர். இவர்கள் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொண்டால், அவர்கள் அந்த நேரத்தில் பள்ளியில் இருந்தது போன்றே ஆவணம் இருக்கும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் இருப்பதாகவே நினைப்பர்;
ஆனால், மாணவர்கள் வெளியில் ஊர் சுற்றும் நிலை உள்ளது. இதைத் தடுக்க, ஒவ்வொரு பாடவாரியாக, வருகையை பதிவு செய்யும் முறை, அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, எழும்பூரில் உள்ள அம்பேத்கர் அரசு மேல்நிலை பள்ளியில், இந்த திட்டம், முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடமும் துவங்கும் போது, மாணவர்களின் இருப்பை உறுதி செய்கின்றனர். மாணவர் யாராவது இடையில் இல்லாவிட்டால், உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து போனில் தகவல் சொல்லி விடுகின்றனர். மேலும், மறுநாள் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி விளக்கம் கேட்டு, மாணவர்களுக்கு அறிவுரை கூறுகின்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, 'இந்த திட்டம் ஊர்சுற்றும் மாணவர்களை திருத்துவதுடன், மாணவர்களுக்கு தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படாமலும், பெற்றோரின் நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் இருக்கும். அதனால், அனைத்து பள்ளிகளுக்கும் இந்த நடைமுறையை விரிவுபடுத்த வேண்டும்' என்றனர்.
No comments:
Post a Comment