ஏ.டி.எம். பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பணவர்த்தனை கணிசமாக குறைந்துள்ளது. கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம்.களை மாதத்திற்கு 5 முறையும், மற்ற வங்கி ஏ.டி.எம்.களை 3 முறையும் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் எனவும், அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கடந்த மாதம் நவம்பர் 1 முதல் கட்டுப்பாட்டை விதித்தது.
இந்த கட்டுப்பாடுகள் புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாடு காரணமாக ஏ.டி.எம்.களில் பணவர்த்தனை 9 சதவீதம் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, ஒரு மாதத்தில் ஏ.டி.எம். மையங்களில் சராசரியாக நடக்கும் பணவர்த்தனை 86 லட்சத்திலிருந்து, 81 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று பரிவர்த்தனைகள் குறையும் பட்சத்தில் ஏடிஎம் மையங்களை இயக்க வங்கிகளுக்கு தேவைப்படும் செயல்பாட்டு கட்டணத்தை சமாளிக்க வங்கிகள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment