பள்ளி மாணவர்களின் தாய், தந்தை இறந்தால் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய், தந்தை விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்கவும், அவர்களது பராமரிப்பு செலவுகளுக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் அந்த மாணவர்களுக்கு நிவாரணத்தொகையாக வழங்கப்படுகிறது.
இந்த நிவாரணத்தொகை அரசு நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்யப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் வட்டி தொகை மற்றும் முதிர்வு தொகை அந்த மாணவரின் கல்வி செலவு மற்றும் பராமரிப்பு செலவுக்கு பயன்படுத்தப்படும். இந்நிலையில், கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், பள்ளி மாணவர்களின் தாய் அல்லது தந்தை இறந்தாலோ, விபத்தில் பாதிக்கப்பட்டாலோ மாணவர்களுக்கு வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகையை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதற்கான முறையான அரசு ஆணையை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா இன்று (3ஆம் தேதி) வெளியிட்டுள்ளார். -எம்.கார்த்தி
No comments:
Post a Comment