பாஸ்போர்ட் விண்ணப்பத்தின்போது சமர்ப்பிக்கப்படும் திருமண பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களில் விண்ணப்பதாரர்கள் இனி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் (எஹக்ஷ்ங்ற்ற்ங்க் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்ள்) கையொப்பம் பெற வேண்டியதில்லை என பாஸ்போர்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஸ்போர்ட் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தங்களின் பல்வேறு தேவைகளுக்காக அரசு துறைகளிடம் பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது, அந்த விண்ணப்பங்களில் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகளின் கையொப்பம் பெறும் நடைமுறையை நீக்க வேண்டும் என அனைத்து அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளத
ு. மத்திய அரசின் தற்போதைய இந்த அறிவிப்பை பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் கடந்த 2000 -ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. அதாவது, பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படும் பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்று, கல்வித் தகுதி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றில் விண்ணப்பதாரர்களின் சுய கையொப்பம் மட்டும் இருந்தால் போதுமானது. அவற்றில் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகளின் கையொப்பம் கோரப்படுவதில்லை. இந்த ஆவணங்களின் வரிசையில் தற்போது 18 வயது நிரம்பாத பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் அவரது பெற்றோரின் பாஸ்போர்ட் நகல்கள், திருமண பதிவுச் சான்று, ஓய்வுபெற்ற அரசு அலுவலரின் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் கோரப்படும் அவரின் ஓய்வூதிய ஆணையின் நகல் ஆகியவற்றிலும் இனி விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயகையொப்பம் மட்டும் இட்டால் போதுமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment