அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், 9 மற்றும் 10 ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், செப்.,1 முதல் 3 நாட்கள் நடக்கிறது. மாணவர்களுக்கு எளிதில் புரியும்வகையில் அறிவியலை கற்பிப்பது, அவர்களை போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்வது, பள்ளி அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிப்பது உள்ளிட்டவை குறித்து இம்முகாமில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்காக 32 மாவட்டங்கள் கோவை, திருச்சி, நாகை, தேனி, விருதுநகர் என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் இப்பயிற்சியில், சிறப்பு மற்றும் முதன்மை கருத்தாளர்கள் (மூத்த ஆசிரியர்கள்) 72 பேர், கருத்தாளர்கள் 264 பேர் பங்கேற்கின்றனர். அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி திட்ட மாவட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “இப்பயிற்சி பெறுவோர் பின்னர் மாவட்ட பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பர். மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதே இதன் முக்கிய நோக்கம்,” என்றார்.
No comments:
Post a Comment