"பள்ளி மாணவர் களுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கான மாநில கண்காட்சி, திருச்சியில் செப்.,6,7 தேதிகளில் நடக்கிறது, ”என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளார். அவரது சுற்றிக்கை: 2013 14ம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்காக, மாவட்ட அளவில் கண்காட்சி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களின் படைப்புகள் செப்.,6,7ல் திருச்சி ஷிவானி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெறும், மாநில அளவிலான கண்காட்சி யில் இடம்பெற உள்ளன.
அதில் அமைச்சர்கள், கலெக்டர்,பள்ளிகல்வித்துறை உயரதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். எனவே மாவட்ட அளவி லான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களின் பெயர்கள் பள்ளி முகவரி அவர்கள் படைத்த சாதனங்கள் உள்ளிட்ட விபர பட்டியலை முதன்மைக்கல்வி அதிகாரிகள் மெயிலில் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். கலந்து கொள்ள வரும் மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பமிட்ட சான்றுடன் வருவது அவசியம். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment