;தமிழகத்தில் பள்ளி, பஸ் வசதி இல்லாத 813 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் 11,002 மாணவர்கள் உள்ளனர். இவர்களில், தொடக்கப்பள்ளிகளில் 8,035 பேர், நடுநிலைப்பள்ளிகளில் 2,967 பேர் வெளியூர்களுக்கு சென்று பயில்கின்றனர்.இவர்கள் ஆட்டோ, வேன், ஜீப் போன்ற வாகனங்களில் பள்ளிக்கு சென்றுவர, ஒவ்வொரு மாணவருக்கும் போக்குவரத்து நிதியாக மாதம் ரூ.300 வீதம், ஆண்டிற்கு ரூ.3,000 வழங்கப்படுகிறது. இந்த நிதியை, மாணவரின் பெற்றோரிடம் பயனீட்டு சான்று பெற்று வழங்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் 4,857 மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக, ரூ.1.45 கோடி ஒதுக்கப்பட்டது. மீதியுள்ள 6,145 பேருக்கு ரூ.1.84 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
No comments:
Post a Comment