இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, August 11, 2014

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: பழங்குடியினப் பிரிவில் அதிக காலியிடங்கள்


பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் பழங்குடியினப் பிரிவில் 45 சதவீதத்துக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்குத் தகுதியானவர்கள் கிடைக்காததால் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் எடுத்து 29 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இதனிடையே அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்தது.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேருக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண்ணின் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆசிரியர் நியமனத்தில் பழங்குடியினப் பிரிவினருக்கு 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த நியமனத்தில் பின்னடைவு காலிப்பணியிடங்கள், இப்போதைய காலிப்பணியிடங்கள் என பழங்குடியினப் பிரிவினருக்காக மொத்தம் 182 காலியிடங்கள் உள்ளன. இப்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வுப் பட்டியலில் பழங்குடியினத்தவர்களுக்கான பிரிவில் 86 இடங்களுக்குத் தகுதியான தேர்வர்கள் கிடைக்காததால் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கூடுதலாக 5 சதவீத இடஒதுக்கீடு வேண்டும்: இந்த காலிப்பணியிடங்கள் தொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் பெ.சண்முகம் கூறியது: பழங்குடியின மாணவர்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக சிறப்புப் பயிற்சி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதோடு, பழங்குடியினப் பிரிவில் பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால் இந்தப் பிரிவினருக்கு கூடுதலாக 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், என்றார். தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவில் 40 காலியிடங்கள்: இந்தத் தேர்வுப் பட்டியலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டில் 29 காலிப்பணியிடங்கள் உள்பட தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டில் 40 காலிப்பணியிடங்கள் உள்ளன.

புவியியல் பாடத்தில் 225 காலியிடங்கள்: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் புவியியல் பாடத்தில் மிக அதிகபட்சமாக 225 காலிப்பணியிடங்கள் உள்ளன. பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இப்போதைய காலியிடங்களின் எண்ணிக்கை 890 ஆக இருந்தது. புவியியல் பாடத்தில் மிக அதிகபட்சமாக 25 சதவீத அளவுக்கு தகுதியான ஆசிரியர்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 தேர்வில் ஓரளவு நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள்கூட பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதால் புவியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களுக்குப் போதிய எண்ணிக்கையில் தகுதியானவர்கள் கிடைப்பதில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment