்
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜுலை 10ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், மதிய உணவு திட்டத்திற்காக, ரூ.13,215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் பல்வேறான பிரிவுகளில், கல்விக்கென்று நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை,
* மதிய உணவுத் திட்டத்திற்கு, ரூ.13,215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.4,727 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்த ரூ.1,650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* சர்வ சிக்சா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,250 கோடி ஒதுக்கீடு
* நாளந்தா பல்கலைக்கழகம் சிறப்பான முறையில் மறுநிர்மாணம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், அதற்கான குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.
கல்வித்துறை தொடர்பான இதர அறிவிப்புகள்
* ஆந்திரா, மேற்கு வங்கம், குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிதாக 4 எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்படும். அதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* உயர்கல்விக்கான வங்கிக் கடன் பெறும் நடைமுறைகளை எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* ரூ.30 கோடியில் பள்ளி மதிப்பாய்வு திட்டம் தொடங்கப்படும்.
* அசாம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், வேளாண் மற்றும் விவசாய தொழில்நுட்பத்திற்கான 2 புதிய கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும்.
* அசாம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், 2 ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்படும்
* பெங்களூர் மற்றும் ஹரியானாவின் பரிதாபாத்தில், 2 புதிய பயோடெக்னாலஜி கொத்துக்கள்(clusters) தொடங்கப்படும்.
* பள்ளிப் பாடத்திட்டமானது பாலின முக்கியத்துவம் குறித்த ஒரு தனி அத்தியாயத்தை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்ற செயல்திட்டம்.
* சுங்கம் மற்றும் கலால் துறை தொடர்பாக, ஆந்திர மாநிலத்தில், ஒரு தேசிய கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்படும்.
* வேலைவாய்ப்பு பதிவு மையங்கள், கேரியர் மையங்களாக மாற்றப்பட்டு, தகவல் மற்றும் ஆலோசனை உதவிகள் வழங்கப்படுவதற்கான திட்டம்.
* பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பின் மூலம், நானோடெக்னாலஜி துறைக்கான 5 தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்கள் வலுப்படுத்தப்படும்.
No comments:
Post a Comment