'10ம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி எண்ணிக்கை, 16ல் இருந்து 26ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், பாட ஆசிரியர்கள், மாணவர்கள் கண் முன், 10 செய்முறைகளை செய்து காட்ட வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்களும், 'வீட்டுப்பாடம்' செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த, 2011 - 12ல், 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வு திட்டம் அமல்படுத்தப்பட்டது. பொது தேர்வில், எழுத்து தேர்வுக்கு, 75 மதிப்பெண், செய்முறை தேர்வுக்கு, 25 மதிப்பெண் என, பிரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, அறிவியல் ஆசிரியர்கள், செய்முறை பயிற்சி குறித்து, மாணவர்களிடையே விளக்குவர். ஆனால், அவர்களே, செய்முறை பயிற்சியில் ஈடுபடுவது, மிகவும் குறைவு. மாணவர்களுக்கு, 16 வகையான செய்முறை பயிற்சி திட்டங்கள், அமலில் இருந்து வருகின்றன. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு முதல், மொத்த செய்முறை பயிற்சி எண்ணிக்கை, 26ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கல்வித்துறை அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது
: பத்தாம் வகுப்பு, அறிவியல் செயல்முறையை மேம்படுத்தும் வகையில், மொத்த பயிற்சிகளின் எண்ணிக்கை, 26ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த, 16 செய்முறைகளை, மாணவர்கள் செய்கின்றனர். தற்போது, கூடுதலாக, 10 செய்முறை பயிற்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதை, மாணவர்கள் கண் முன், அறிவியல் பாட ஆசிரியர்கள் செய்ய வேண்டும்.இவ்வாறு, அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.கல்வித்துறையின் இந்த உத்தரவு காரணமாக, மாணவர்களைப் போல், ஆசிரியர்களும், 'வீட்டுப்பாடம்' செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுஉள்ளது. மாணவர்கள் முன், 10 செய்முறை பயிற்சிகளையும், எவ்வித தவறும் இல்லாமல் செய்ய வேண்டிய கட்டாயம், ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டுஉள்ளது
.ஆசிரியர் செய்ய வேண்டியதுஉயிரியல் - தாவரவியலில்- 2 உயிரியல் - விலங்கியலில்- 2 வேதியியலில்- 4 இயற்பியலில்- 2 என, 10 செய்முறைகளை, மாணவர்கள் முன் செய்துகாட்ட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment