அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில், 2014--15ம் கல்வியாண்டிற்கான, திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும், மாநில அளவிலான கூட்டம், மதுரையில், மார்ச் 21,22ல் நடக்கிறது. 9ம்வகுப்பு மற்றும் 10ம்வகுப்பு, மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, மத்திய அரசு நிதியுதவியுடன், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான நிதி, தமிழக அரசு மூலமாக வழங்கப்படுகிறது. 2014--15ம் கல்வியாண்டிற்கான, இதன் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும், மாநில அளவிலான கூட்டம், மதுரை நாகமலை புதுக்கோட்டையில், மார்ச் 21,22ல் நடக்கிறது. திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில
்,"மத்திய மனிதவள அமைச்சகத்தின், உயரதிகாரிகள் குழுவின் மூலம் நடத்தப்படும், இக்கூட்டத்தில், தமிழகத்தின் 32 மாவட்டங்களின், அதன் உதவித்திட்ட அலுவலர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொள்வர். இந்த கல்வியாண்டில், ஒதுக்கப்பட்ட நிதி, அதில் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டியது, சீரமைத்தது, மாணவர்களின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்தியது, ஆசிரியர்களுக்கான சம்பளம், பள்ளி மேலாண் வளர்ச்சிக்குழுவின் பணிகள் உள்ளிட்டவை தொடர்பான விபரம் அளிக்கப்படும். இதுபோல், அடுத்த கல்வியாண்டில், பல்வேறு வளர்ச்சிபணிகளுக்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
அதை குழுவினர் பரிசீலித்து, மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் அளிப்பர். பின்னர், மத்திய அரசு மூலம், தமிழக அரசுக்கு, மாவட்ட வாரியாக, பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படும்,” என்றார்.
No comments:
Post a Comment