இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 04, 2014

ஓ.பி.சி.,யினருக்கு, 50 சதவீத மதிப்பெண் போதும்: யு.ஜி.சி., அறிவிப்பு விரைவில

   கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கான, "நெட்' தேர்வில் பங்கேற்க, ஓ.பி.சி., பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை, 5 சதவீதம் குறைக்க, பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) முடிவெடுத்துள்ளது. அடுத்த தேர்வுகளில், இந்த மதிப்பெண் குறைப்பு அமலாகலாம் என, கூறப்படுகிறது. முதுகலை பட்டம் - எம்.பில்., முடித்தவர்கள், கல்லூரி பேராசிரியர் பணியில் சேர, யு.ஜி.சி.,யின், "நெட்' தேர்வில் வெற்றி பெறவேண்டும். இத்தேர்வில் பங்கேற்க, முதுகலை பட்டப்படிப்பில், ஓ,பி.சி., பிரிவினர், 55 சதவீதமும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 50 சதவீதம் மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். ஆண்டுக்கு, இரண்டு முறை நடத்தப்படும், "நெட்' தேர்வில், இந்த மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும். இந்நிலையில், ஓ.பி.சி., பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை, 5 சதவீதம் குறைக்க, யு.ஜி.சி., முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த யு.ஜி.சி., கூட்டத்தில், இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, மே மாதம் நடக்கும், "நெட்' தேர்வில், இந்த தகுதி மதிப்பெண் குறைப்பு அமல்படுத்தப்படலாம் என தெரிகிறது. மதிப்பெண் குறைப்பு மூலம், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு இணையாக, ஓ.பி.சி., பிரிவினர், தேர்வில் அதிகளவில் பங்கேற்பர் என, தெரிகிறது.

No comments:

Post a Comment